உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது

குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது

கும்மிடிப்பூண்டி, பொம்மாஜிகுளம் சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, ஆந்திர மாநிலம், சத்தியவேடு பகுதியில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி, டூ - -வீலரில் சென்ற நபரை, சோதனை செய்தனர்.அதில், 990 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதை கடத்திய, ஊத்துக்கோட்டை அடுத்த, கீழ்கருமனுார் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 47, என்பவரை, பாதிரிவேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !