உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்டு குடிநீர் திட்டம் துவக்கம்

கூட்டு குடிநீர் திட்டம் துவக்கம்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், குடிநீர் பிரச்னை நிரந்தரமாக தீர்ப்பதற்கு கடந்த, 2020ம் ஆண்டு தமிழக அரசு, 110 விதிகளின் படி, திருப்பாற்கடலில் இருந்து திருத்தணி நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் ஏற்படுத்த, 109.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணி துவங்கியது. பணி முடிந்து சோதனை ஓட்டமும் துவங்குவதற்கு தயாராக இருந்தது.இந்நிலையில் நேற்று கூட்டுக்குடிநீர் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, துணைத் தலைவர் சாமிராஜ் ஆகியோர் குடிநீர் மின்மோட்டார்களை இயக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை