| ADDED : ஜன 23, 2024 05:17 AM
பாண்டூர்: திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதுாரில் அமைந்துள்ளது அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி. இங்கு 1,100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்றாண்டு சட்டப்படிப்பு பயின்று வருகின்றனர்.அதேபோன்று பேராசிரியர், அலுவலக ஊழியர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். சட்டக்கல்லுாரி வளாகம், 49 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இந்த வளாகத்தில் பிரதான தார்ச்சாலை சேதமடைந்து உள்ளது. இச்சாலை வழியாகவே மாணவர்கள் போக்குவரத்திற்காக திருவள்ளூர் ரயில் நிலையம் முதல் கல்லுாரி வரை இயக்கப்படும் அரசு பேருந்து தினமும் சென்று வருகிறது.மேலும் இந்த பிரதான சாலையில் பேருந்து திரும்பும் இடத்தில் சாலை பெயர்ந்து, சேதமடைந்து மோசமாக காட்சியளிப்பதால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.மேலும் கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இதுகுறித்து சட்டக்கல்லுாரி நிர்வாகத்திடம் தெரிவித்தும், சாலையை சீரமைக்காதது மாணவர்கள், அலுவலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.கல்லுாரி நிர்வாகம் தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.