மேலும் செய்திகள்
பயன்பாட்டுக்கு வருமா ஊர்ப்புற நுாலக கட்டிடம்
29-Mar-2025
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் புதுார்மேடு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றியுள்ள பைவலசா, வெங்கடாபுரம், தாமரைக்குளம், தேவலாம்பாபுரம், கட்டாரிகுப்பம், விடியங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு மையமாக அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளவும், அன்றாட தேவைக்காகவும், தினசரி புதுார்மேடு கிராமத்திற்கு சென்று வருகின்றனர். புதுார்மேடு பேருந்து நிறுத்தம் அருகே, ஊராட்சி நுாலகம் செயல்பட்டு வருகிறது.பல்வேறு ஊராட்சிகளில் நுாலகங்கள் செயல்படாமல் உள்ள நிலையில், இந்த நுாலகம் தொடர்ந்து முறையாக செயல்பட்டு வருகிறது. நாளிதழ்களும், புத்தகங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமான வாசகர்கள் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில், இரவு நேரத்தில் இந்த நுாலக வளாகத்தில் 'குடி'மகன்கள் மது அருந்தி வருகின்றனர். காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, நூலக வளாகத்தில் மது அருந்தும் மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-Mar-2025