உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறு மின்விசை குழாய் பழுது சீரமைக்க பகுதிமக்கள் கோரிக்கை

சிறு மின்விசை குழாய் பழுது சீரமைக்க பகுதிமக்கள் கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் ஊராட்சியில் பொன்னாங்குளம் கிராமம் அமைந்துள்ளது. மணவூர் சாலையில், அப்பகுதி மக்களின் கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி சார்பில், மினிடேங்குடன் கூடிய சிறுமின்விசை குழாய் அமைக்கப்பட்டது. இதை, வீட்டு உபயோக கூடுதல் தண்ணீர் தேவைக்கு பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன், மினிடேங்கில் தண்ணீர் நிரப்புவதற்காக, ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதானது. இதனால், கூடுதல் குடிநீர் தேவைக்கு இத்தெரு மக்கள் மினி டேங்கில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்மூழ்கி மின்மோட்டாரை சீரமைத்து, சிறுமின் விசைக் குழாயை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஆற்காடுகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ