உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு ஊழியர்கள் பணிக்கு வராமல் புறக்கணிப்பு

திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு ஊழியர்கள் பணிக்கு வராமல் புறக்கணிப்பு

திருத்தண:திருத்தணி காந்தி ரோடு பழைய தாசில்தார் அலுவலக வளாகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, பிறப்பு சான்று வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அரசு விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள அனைத்து நாட்களும் சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. தமிழகத்திலுள்ள அனைத்து சார் - பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அரசின் வருவாய் அதிகரிக்க அரசு விடுமுறை நாட்களிலும் பதிவுத் துறை இயங்கும் என, சமீபத்தில் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக, திருமண முகூர்த்த நாளில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும். ஆனால், நேற்று திருமண முகூர்த்த நாள் இருந்தும் சார் - பதிவாளர் அலுவலகம் திறக்காமல் பூட்டியே கிடந்ததால், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.இது குறித்து சார் - பதிவாளர் அலுவலக ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது:அரசு விடுமுறை, பண்டிகை தினம் என்றால் 'சிறப்பு பதிவு நாள்' என, கூடுதல் கட்டணமாக 1,000 பெறுகிறோம். இதன் வாயிலாக அரசுக்கு அந்த ஒரு நாளில் மட்டும் குறைந்தபட்சம், 45.60 லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது.ஆனால், பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை. பணியாற்றும் நாளுக்கு மாற்று விடுப்பு மட்டுமே வழங்குகின்றனர்.இதனால் குடும்பத்தினருடன் இருக்க முடியாமல் தவிக்கிறோம். இதை தடுக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்து தமிழகம் முழுதும் சார் - பதிவாளர்கள் செயல்படவில்லை என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை