உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புட்லுார் அம்மன் கோவிலில் 26ல் மஹா சிவராத்திரி விழா

புட்லுார் அம்மன் கோவிலில் 26ல் மஹா சிவராத்திரி விழா

புட்லுார்:புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வரும் 26ம் தேதி, மஹா சிவராத்திரி விழா நடக்கிறது.திருவள்ளூர் அடுத்த, புட்லுாரில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோohலில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியன்று உற்சவமும், மறுநாள் அமாவாசையன்று மயான கொள்ளை சூரை வைபவமும் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.மறுநாள் 26ம் தேதி மஹா அபிஷேகம், மாலை அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் இடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, இரவு மஹா சிவராத்திரி உற்சவம் மற்றும் அம்மன் வீதியுலா வருதல் நடைபெறும். வரும் 27ம் தேதி, அம்மனுக்கு அபிஷேகம், மதியம் மயான கொள்ளை சூறை உற்சவம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி