உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வக்கீலை தாக்கியவர் கைது

வக்கீலை தாக்கியவர் கைது

திருத்தணி:திருத்தணி - சித்துார் சாலையை சேர்ந்த லோகேஷ் கண்ணா, 26, என்பவர் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு அரசு பேருந்து தடம் எண்: 201 பேருந்தில் பயணம் செய்த போது, கூட்ட நெரிசலில் திருத்தணி வேலஞ்சேரியை சேர்ந்த அருண் என்பவரின் முகத்தில் லோகேஷ் கண்ணா கை பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அருணின் நண்பர்கள் ஐந்து பேர் திருத்தணி பைபாஸ் ரவுண்டானாவுக்கு வந்தனர்.ரவுண்டானாவுக்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிய லோகேஷ்கண்ணாவை, விஜய், விஷ்ணு உள்பட ஐந்து பேரும் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த லோகேஷ் கண்ணா திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்ந்தாதிருத்தணி போலீசார், 5 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். நேற்று விஷ்ணு,25 என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ