மேலும் செய்திகள்
23 சவரன் நகைகள் திருட்டு
28-Aug-2025
- திருவள்ளூர் ,திருவள்ளூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் கே.கே.ஆர். மில்லியணம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன, 45. இவர் கடந்த 29ம் தேதி சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். பின் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3.5 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பாத்திரம் 47 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானது தெரிந்தது. ஆனந்தன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பண்ட்ரூட்டி பகுதியைச் சேர்ந்த மணிபாலா, 26 என்பவர் திருடியது தெரிந்தது. இதையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் சென்ன சூளைமேடு பகுதியில் பதுங்கியிருந்த மணிபாலாவை கைது நேற்று செய்தனர். அவரிடமிருந்து 410 கிராம் வெள்ளி 4, 020 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
28-Aug-2025