உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சம்பளம் தராத ஆத்திரத்தில் நண்பனை கொன்றவர் கைது

சம்பளம் தராத ஆத்திரத்தில் நண்பனை கொன்றவர் கைது

திருவேற்காடு:சம்பள பணத்தை தராமல் ஏமாற்றிய நண்பனை, கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.திருவேற்காடு, செல்வ கணபதி நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி, 45; பெயின்டர். கடந்த 26ம் தேதி கிரீன் பார்க் 2வது பிரதான சாலை பின்புறம் உள்ள முட்புதரில், கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.திருவேற்காடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சுடலை, 42, என்பவரை, கைது செய்து விசாரித்தனர். இதில், தண்டபாணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.இது குறித்து போலீசார் கூறியதாவது:சுடலை, தண்டபாணி இருவரும் நண்பர்கள். ஒன்றாக பெயின்டிங் வேலை செய்து வந்தனர். கடந்த 22ம் தேதி, சுடலையின் 1,000 ரூபாய் சம்பள பணத்தை தராமல், தண்டபாணி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு முறை வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தண்டபாணி வீட்டில் இல்லை.இந்நிலையில், கடந்த 26ம் தேதி அதிகாலை, மேற்கூறிய முட்புதரில் தண்டபாணி மது போதையில் படுத்திருந்தார். அங்கு சென்ற சுடலை, தண்டபாணியின் கழுத்தில் கத்தியால் குத்தி தப்பியுள்ளார்.இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, திருவேற்காடு போலீசார் சுடலையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை