மேலும் செய்திகள்
ரூ.2 லட்சம் போதை பவுடர் விற்ற இருவர் கைது
24-Nov-2024
சென்னை': மண்ணடி பகுதிகளில் போதை பவுடர் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, பூக்கடை தனிப்படை போலீசார், மண்ணடி பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரு வாலிபர்கள் போதை பவுடர் பதுக்கி விற்றது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், ஆயிரம்விளக்கு மசூதி அருகே பதுங்கி இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார், நேற்று இருவரையும் கைது செய்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில் இவர்கள், திருவல்லிக்கேணி ஈஸ்வரன் தெருவைச் சேர்ந்த மகேஷ், 30, அண்ணா நகர், 15வது பிரதான சாலை, மத்திய வருவாய் குடியிருப்பில் வசிக்கும் பாரூக், 29, என தெரிந்தது.இதில் மகேஷ், பிரபல தனியார் ஆங்கில பத்திரிகையில் வேலை பார்த்து, விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.இவரிடம் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைன் போதை பவுடர் 12 கிராம், 30 போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர்.மேலும் இவர்கள், முதாசிர் என்பவரிடம் இருந்து போதை பவுடரை,'போர்ட்டர், சுவிக்கி' செயலி வாயிலாக வாங்கி, 'வாட்ஸாப்' வாயிலாக விற்றதும் தெரிந்தது.இதையடுத்து இவர்கள், போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி முதாசிரை தேடி வருகின்றனர்.
24-Nov-2024