உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சவுடு மணல் லாரி ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சவுடு மணல் லாரி ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மப்பேடு:மப்பேடு அருகே அரசு அனுமதியுடன் ஏரியில் சவுடு மணல் எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜசேகர், 39. இவர் அரசு உத்தரவு பெற்று, பேரம்பாக்கம் ஏரியில் சவுடு மணல் அள்ளி, செல்லம்பட்டிடை கிராமத்திற்கு ஐந்து செங்கல் சூளைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வருகிறார். நேற்று முன்தினம் நரசிங்கபுரம் வழியாக சென்ற லாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த சாலமன், 37 என்பவர் மறித்து, லாரி ஓட்டுநர்களை ஆபாசாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சார்லஸ் ராஜசேகர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், சாலமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை