உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிரேனில் இருந்து விழுந்தவர் பலி

கிரேனில் இருந்து விழுந்தவர் பலி

சோழவரம், கடலுார் மாவட்டம், புதுகுப்பம் இலவத்தடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24. இவர், சென்னை சோழவரம் அடுத்த ஆத்துாரில், தனியார் கட்டுமான நிறுவனத்தில், இயந்திர பழுதுநீக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.நேற்று கிரேன் உதவியுடன் மேலே சென்று, இயந்திரம் ஒன்றில் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக கால் தவறி, 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார், ராஜேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை