உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிருஷ்ணா கால்வாயில் விழுந்தவர் பலி

கிருஷ்ணா கால்வாயில் விழுந்தவர் பலி

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட் சி, ரெட்டி தெருவில் வசித்து வந்தவர் சரவணன், 40. கூலி தொழிலாளி. இவருக்கு, சந்தியா என்ற மனைவியும், அப்பு, 17, தீபு, 14, ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, சிட்ரபாக்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில், சரவணன் அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் கால்வாயில் தவறி விழுந்தார். அதைக்கண்ட அருகில் இருந்தோர், ஊத்துக்கோட்டை காவல் நிலையம், தேர்வாய்கண்டிகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சரவணனை தேடிய நிலையில், போந்தவாக்கம் அருகே கால்வாய் ஓரம் சடலமாக மீட்கப்பட்டார். பென்னலுார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை