உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வழி விடுவதில் தகராறு தாக்கிய நபர் எஸ்கேப்

வழி விடுவதில் தகராறு தாக்கிய நபர் எஸ்கேப்

திருவாலங்காடு:பழையனுாரில் நிலத்திற்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாலங்காடு ஒன்றியம்பழையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நுாக்கையன், 50. இவருக்கும், அருகே வசிக்கும் குமார், 35, என்பவருக்கும், வீட்டருகே உள்ள பொது பாதையில் வழி விடுவதில் பிரச்னை இருந்து வந்தது.நேற்று முன்தினம் மாலை, நுாக்கையன் வீட்டில்இருந்த போது, அங்கு வந்த குமார் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நுாக்கையனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து நுாக்கையன்மகன் மணிகண்டன் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை