உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரி மதகில் தண்ணீர் திறக்க சென்றவர் பலி

ஏரி மதகில் தண்ணீர் திறக்க சென்றவர் பலி

பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம், பண்ணுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாபு, 53; இவர், பாண்றவேடு ஏரி மதகை திறக்க, பள்ளிப்பட்டு பொதுப்பணித் துறை பணி ஆய்வாளர் கணபதி அழைத்து சென்றுள்ளார். பாண்றவேடு ஏரிக்கு சென்று தண்ணீர் திறக்க மதகு வழியே உள்ளே இறங்கி உள்ளார்.இரண்டு முறை முயற்சி செய்து, மூன்றாவது முறையாக இறங்கிய போது கயிறு அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிப்பட்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ