உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாட்டிற்கு வந்தது திருமணம் ஊராட்சி அலுவலகம்

பயன்பாட்டிற்கு வந்தது திருமணம் ஊராட்சி அலுவலகம்

திருமழிசை:திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட திருமணம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்திருப்பதால், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2024- - 25-ன்கீழ், 30 லட்சம் ரூபாயில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது..இதையடுத்து, புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா, நேற்றுமுன்தினம், பூந்தமல்லி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி முன்னிலையில், ஊராட்சி தலைவர் ராதிகாவீரன் தலைமையில் நடந்தது.சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி. பங்கேற்று, 30 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து, பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை