மேலும் செய்திகள்
ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்
22-Mar-2025
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதுார் கிராமத்தின் தென்கிழக்கில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, பிரசவ விடுதி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.ஆர்.கே.பேட்டையில் இருந்து 1 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இந்த சுகாதார நிலையத்திற்கு, ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பேருந்து வசதி இல்லாததால், ஆர்.கே.பேட்டையில் இருந்து நடந்துவர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி சேதமடைந்துள்ளது. இந்த குப்பை தொட்டியில், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.குப்பை தொட்டி திறந்த நிலையில் கிடப்பதால், மருத்துவ கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவ கழிவுகளை முறையாக வெளியேற்றவும், மருத்துவமனையின் பாதுகாப்பான பகுதியில் மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22-Mar-2025