உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் திணறல்

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் திணறல்

திருவள்ளூர்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கு மேலான வாகனங்கள் சென்று வருகின்றன.கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு உள்ள நிலையில் தைப்பொங்கல், உழவர் திருநாளை முன்னிட்டு, சென்னையிலிருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கள் கிராமங்களை நோக்கி இருசக்கர வாகனம் உட்பட வாகனங்களில் செல்கின்றனர்.இந்நிலையில், நேற்று காலை 8:00 மணி வரை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால், முகப்பு விளக்குளை எரிய விட்டு வாகனங்கள் சென்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ