உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் தூய்மை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருத்தணியில் தூய்மை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருத்தணி:திருத்தணி நகரத்தில் தன்னார்வலர்கள், 'நமது திருத்தணி, துாய்மை திருத்தணி' என்ற அமைப்பை துவங்கியுள்ளனர். இவர்கள், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - காலை 9:00 மணி வரை கோவில்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், துாய்மை பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர்.இதில், சிறுவர் - சிறுமியர் முதல் ஆண், பெண்கள் என, 50க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பில் சேர்ந்து துாய்மை பணிகள் மேற்கொள்கின்றனர். இதன் துவக்க விழா, நேற்று திருத்தணி பழைய தர்மராஜகோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.இந்த அமைப்பின் தலைவர் கிஷோர் தலைமை வகித்தார். இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று கோவில் வளாகத்தை சுத்தம் செய்து தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை