மேலும் செய்திகள்
டிக்கெட் எடுத்து தருவதாக கூறி வழிப்பறி
10-Oct-2024
செம்பியம் : நேபாளம், தனுஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வான் சதா, 28. வேளச்சேரியில் உள்ள காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்வதற்காக, பெரம்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த மர்மநபர்கள், டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக கூறி, பெரம்பூர் நெடுஞ்சாலை அழைத்து சென்று, அவரிடம் இருந்த 13,000 ரூபாய் மதிப்புள்ள 'ரெட்மி' மொபைல்போன், 2,000 ரூபாய் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த வாரம் வடமாநில நபரிடம் இதே பாணியில் வழிப்பறி நடந்தது குறிப்பிடத்தக்கது.
10-Oct-2024