உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆர்.கே.பேட்டை பகுதியில் குரங்குகளால் தொல்லை

 ஆர்.கே.பேட்டை பகுதியில் குரங்குகளால் தொல்லை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை பகுதி யில் உலா வரும் குரங்குகளின் தொல்லையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆர்.கே.பேட்டை, விசாலீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றியுள்ள குளக்கரை தெரு, கலைமகள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் உலா வருகின்றன. பகல் நேரம் மட்டும் இல்லாமல், இரவு நேரத்திலும் நடமாடுகின்றன. தெருவில் விளையாடும் குழந்தைகளை துரத்தி அச்சுறுத்துகின்றன. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்கின்றன. வீட்டின் கதவுகளை திறந்து வைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆர்.கே.பேட்டையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் குரங்குகள் இருந்தன. தற்போது 30க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்துள்ளன. குரங்குகள் ஆக்ரோஷ மாக நடந்து கொள்கின்றன. வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, குரங்குகளை பிடித்து பாதுகாப்பான பகுதியில் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை