மேலும் செய்திகள்
9500 கிலோ பட்டாசு குப்பை திருவள்ளூரில் அகற்றம்
02-Nov-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கொசு புழு ஒழிக்க மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, கொசு புழு உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து, நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின்படி, சுகாதார அலுவலர் மோகன் தலைமையிலான சுகாதார பிரிவினர், அனைத்து வார்டுகளிலும், கொசு மருந்து தெளிக்கும் பணியை துவக்கி உள்ளனர். இப்பணியை தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும், தெளிக்கப்பட உள்ளதாக, நகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்தார்.
02-Nov-2024