உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரெட்டிப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகள் சாகச பயணம்

ரெட்டிப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகள் சாகச பயணம்

பொன்னேரி : மீஞ்சூர் ஒன்றியம், வேலுார் கிராமத்தில் இருந்து, எரியபிள்ளைகுப்பம் ரெட்டிப்பாளையம் வழியாக பொன்னேரி செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.கடந்த மாதம் வேலுார் ஏரியில் மண் குவாரி செயல்பட்டபோது, நுாற்றுக்கணக்கான லாரிகள் இந்த சாலையில் சென்றதால், மேலும் மோசமாகி உள்ளது.சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் உள்ளன. தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழையால் பள்ளங்களில் மழைநீர் சிறு சிறு குட்டைகளாக தேங்கி உள்ளன.சரளைகற்களிலும், தேங்கியுள்ள மழைநீரிலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சாகச பயணம் மேற்கொள்கின்றனர்.இந்த சாலையானது மேட்டுப்பாளையம் - திருவெள்ளவாயல் நெடுஞ்சாலை மற்றும் பொன்னேரி - தத்தமஞ்சி நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கிறது.பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த சாலை வழியாக பயணிக்கின்றனர். விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லும் டிராக்டர்கள் சாலை பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள இந்த சாலை சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை