மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
2 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
2 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
2 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
2 hour(s) ago
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த விடையூர் ஏரியிலிருந்து அரசு உத்தரவுப்படி கடந்த சில தினங்களுக்கு முன் சவுடு மண் எடுக்கும் பணி துவங்கியது.இங்கிருந்து எடுக்கப்படும் சவுடு மண் சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.தினமும் 300க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் விடையூர் ஏரியிலிருந்து கடம்பத்துார், திருப்பாச்சூர், திருவள்ளூர் வழியாக பல இடங்ளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இவ்வாறு செல்லும் லாரிகள், காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரை திருவள்ளூர் - கடம்பத்துார் மற்றும் திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலை ஒற்றைவழிச் சாலையாக மாறியுள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago