| ADDED : நவ 16, 2025 02:27 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால், நெடுஞ்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பள்ளங்களை வாகனங்கள் தள்ளாடியபடி கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை - குருவராஜகண்டிகை வரையிலான சாலையை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். இச்சாலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர். பாரம் தாங்காமல், சாலையில் ஆறு இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களை கடக்கும் வாகனங்கள், தள்ளாடியபடி சென்று வருவதால், வாகனம் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில், வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். இந்த பள்ளங்களை சீரமைத்தாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது. இதனால், மாநில நெடுஞ்சாலைத் துறையினர், அப்பகுதியில் உறுதியான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.