உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

நகரி:சித்துார் மாவட்டம் நகரி பேருந்து நிலையம் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இங்கு அமைக்கப்பட்ட தரைப்பாலம் வழியாக திருத்தணி, நகரி, புத்துார் வழியாக திருப்பதி மற்றும் காளஹஸ்திக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தின் மீது 5 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், நகரி - திருத்தணி இடையே போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.மேலும், ஆற்றில் வெள்ளம் செல்வதால், கூடுதலாக 6 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் நகரி வாசிகள், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, நகரி எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் நகரி மக்களின் நலன் கருதி, ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ