உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலை மைய தடுப்பு சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

 சாலை மைய தடுப்பு சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஊத்துக்கோட்டை: தண்டலம், சூளைமேனி ஆகிய இடங்களில் உள்ள சாலை மைய தடுப்புகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை, 36 கி.மீ., நீளம் உடையது. இதில், மஞ்சங்காரணி, கன்னிகைப்பேர், பெரியபாளையம், சூளைமேனி, தண்டலம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள், இச்சாலை வழியாக செல்கின்றன. இதில், சூளைமேனியில் இருந்து வலதுபுறம் செல்லும் சாலையில், தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலையில், ஜனப்பன்சத்திரம் - தண்டலம் வரை, சாலை மைய தடுப்பு உள்ளது. அங்கிருந்து, ஊத்துக்கோட்டை வரை சாலை மைய தடுப்பு இல்லை. தண்டலம், சூளைமேனி ஆகிய இடங்களில் உள்ள சாலை மைய தடுப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சேதமடைந்த சாலை மைய தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி