உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெற்களமாகிய தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அவதி

நெற்களமாகிய தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அவதி

திருவாலங்காடு:பாகசாலை கொசஸ்தலையாற்று தரைப்பாலத்தில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியத்தில், நவரை பருவத்தில், 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. அதன்படி வீரராகவபுரம், கூளூர், களாம்பாக்கம் பாடசாலை உட்பட ஆறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாகசாலை பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய, வழிநெடுக சாலையில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். திருவாலங்காடு -- பேரம்பாக்கம் சாலையில் கொசஸ்தலையாற்றின் தரைப்பாலத்தில் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் ஒரு வழி சாலையாக மாறியுள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள், ஒரு வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் முளைவிட துவங்கி விட்டதால் விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை