உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருவள்ளூரில் ரூ.5 கோடியில் கட்டிய பல்நோக்கு கூட்ட அரங்கம் திறப்பு

 திருவள்ளூரில் ரூ.5 கோடியில் கட்டிய பல்நோக்கு கூட்ட அரங்கம் திறப்பு

திருவள்ளூர்: மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கூட்ட அரங்கம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மாதந்தோறும் மக்கள் குறைதீர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், அதிகளவிலான மக்கள் பங்கேற்பர். அதிகப்படியான மக்கள் அமரும் வகையில் பெரிய அளவிலான கூட்ட அரங்கம் கட்ட, கடந்த ஜன., மாதம் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு, 10,829 சதுர அடி பரப்பளவில், 530 பேர் அமரும் வகையில் கட்டுமான பணி நிறைவடைந்தது. கடந்த 24ம் தேதி நடந்த அரசு விழாவில், துணை முதல்வர் உதயநிதி இக்கட்டடத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இனிமேல், அதிகளவில் மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பல்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், இக்கட்டடத்தில் நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி