உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாயமான விவசாயி சடலமாக மீட்பு

மாயமான விவசாயி சடலமாக மீட்பு

பூண்டி:பூண்டி ஒன்றியம் தோமூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமார், 51; விவசாயி. இவர், கடன் தொல்லையால் தீவிர மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த வாரம் அவரது அண்ணன் ராஜகோபால், கழனிக்கு சென்ற முத்துகுமார் காணவில்லை என, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வள்ளியம்மாபேட்டை கிராமத்தில் முத்துகுமார் இறந்த நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது.இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை