உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாபளூர் - ராமாபுரம் நந்தியாற்றில் ரூ.3.17 கோடியில் உயர்மட்ட பாலம்

நாபளூர் - ராமாபுரம் நந்தியாற்றில் ரூ.3.17 கோடியில் உயர்மட்ட பாலம்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர்--- ராமாபுரம் இடையே நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் திருவாலங்காடு ஒன்றிய அலுவலகம், சார்- பதிவாளர். உதவி வட்டார கல்வி அலுவலகம் மற்றும் திருவாலங்காடு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் செல்லும் போது மேற்கண்ட கிராமத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள், கூடுதலாக, 12 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதையடுத்து நந்தியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, கிராமத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.மேலும் நம் நாளிதழில் படத்துடன் நந்தியாற்றின் குறுக்கே பாலம் தேவை என செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர், நாபளூர் - ராமாபுரம் இடையே செல்லும் நந்தியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, 3.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.இதை தொடர்ந்து, நேற்று உயர்மட்ட பாலம் அமையும் இடத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் ராஜவேலு மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின் பொறியாளர் ராஜவேலு கூறுகையில், ''நந்தியாற்றில் தண்ணீர் வேகம் குறைந்தவுடன் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு பணி துவங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை