மேலும் செய்திகள்
கற்கள் பெயர்ந்த குமாரசேரி சாலை
20-Feb-2025
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியிலிருந்து நயப்பாக்கம் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி பகுதிவாசிகள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் திருவள்ளூர் சென்று வருகின்றனர்.இச்சாலை, 2018 - 19ம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ், 35.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. அதன்பின், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால், தற்போது சாலை சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளது.இதனால் பகுதிவாசிகள், பள்ளி கல்லுாரி மாணவி - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Feb-2025