| ADDED : டிச 28, 2025 06:36 AM
திருத்தணி: திருத்தணி ரயில்வே குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளியை, மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். மகாராஷ்டிரா மாநிலம், சோலப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுராஜ், 33. இவர் நேற்று மாலை ரயில் மூலம் திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கினார். பின் ரயில்வே குடியிருப்பு வழியாக காந்தி ரோட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது நான்கு பேர் கொண்ட நபர்கள் திடீரென, சுராஜ்யை தாக்கினர். மேலும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை , க ழுத்து, கால் மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். சுராஜை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.