உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இனி ரூ.10 முதல் ரீசார்ஜ் செய்யலாம்

இனி ரூ.10 முதல் ரீசார்ஜ் செய்யலாம்

சென்னை:சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் காகித டிக்கெட், பயண அட்டை, க்யூ.ஆர்., தொழில்நுட்ப வசதியாக டிக்கெட் பெறும் வசதி இருக்கிறது.இதேபோல், வாட்ஸாப் செயலி, தேசிய பொது இயக்க அட்டை, பேடிஎம் செயலி வாயிலாகவும் டிக்கெட் எடுக்கும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.பயண அட்டையில் 10 ரூபாய் முதல் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனால், தேசிய பொது இயக்க அட்டையில், ஆரம்பமே 100 ரூபாய் இருந்து தான் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். பயணியரின் கோரிக்கையை ஏற்று, தற்போது இந்த அட்டையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:தேசிய பொது இயக்க அட்டை வாயிலாக, மின்சார ரயில், மாநகர பஸ்களில் பயணிக்க வசதியாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மெட்ரோ ரயில்களில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 100 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதால், பயணியர் தயக்கம் காட்டினர். இதையடுத்து 10 ரூபாயிலும் ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்டு வந்துள்ளோம். தற்போது, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் இந்த அட்டையை செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை