உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைநீர் கால்வாய் படுமோசம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மழைநீர் கால்வாய் படுமோசம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பொன்னேரி:ஏரிகளுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பு இன்றி இருப்பதால், துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரி அடுத்த உப்பளம், மடிமைகண்டிகை, ஆசானபூதுார்மேடு, அச்சரப்பள்ளம் கிராமங்கள் வழியாக, வஞ்சிவாக்கம் மற்றும் போலாச்சியம்மன்குளம் ஏரிகளுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது. கால்வாயின் கரைகள் சரிந்தும், புற்கள் வளர்ந்துள்ளன. அச்சரப்பள்ளம் கிராமம் அருகே உள்ள தடுப்பணையும் சேதமடைந்து உள்ளது. விவசாய நிலங்கள் வழியாக கால்வாய் செல்வதால், அதிக மழை பெய்தால், விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற இது உதவியது. மேலும், கால்வாயில் தேங்கிய தண்ணீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, கால்வாய் பராமரிப்பு இன்றி இருப்பதால், விவசாய நிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரம த்திற்கு ஆளாகின்றனர். கால்வாயிலும் மழைநீர் தேங்காத நிலையில், பாசனத்திற்கும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி, கரைகளை பலப்படுத்தி சீரமைக்க, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை