உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

 பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

திருவள்ளூர்: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு, அதிகாலை 5:00 மணிக்கு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். பூஜைகள் முடிந்த பின், வெள்ளி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெரு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், பூங்கா நகர் சிவ விஷ்ணு கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், சொர்க்கவாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள், 'கோவிந்தா... கோவிந்தா' என கோஷமிட்டனர். அதேபோல், தொம்பரம்பேடு, தாராட்சி, போந்தவாக்கம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் நிகழ்ச்சியில், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னேரி பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில், வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில், சயன கோலத்தில் காட்சி தரும் வடஸ்ரீரங்கம் எனப்படும் தேவதானம் ரங்கநாதர் கோவில், தடப்பெரும்பாக்கம் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலை முதல் பக்தர்கள் கோவில்களில் திரண்டு சொர்க்க வாசல் திறப்பை கண்டு பரவசம் அடைந்தனர். ஆர்.கே.பேட்டை வங்கனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வங்கனுார் திரவுபதியம்மன் கோவிலில் பாமா, ருக்மணி சமேத கண்ணபிரான், ரங்கநாதராக சயன கோலத்தில் அருள்பாலித்தார். அதேபோல், ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில், அம்மையார்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், பள்ளிப்பட்டு வரதநாராயண பெருமாள் கோவில்களிலும் நேற்று சொர்க்கவாசல் தரிசனம் நடந்தது. கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை கோ பூஜை, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ