மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர் விருது பெற வாய்ப்பு
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர், தமிழக அரசின் விருது பெற, அக்., 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும். உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச., 3ம் தேதி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு, தமிழக அரசு விருது வழங்க உள்ளது. அதன்படி, சிறந்த பணியாளர் - 10, பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் -- 2, சிறந்த ஆசிரியர் - -1, சிறந்த சமூக பணியாளர் - 1, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் - 1 என, 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பத்தை, https://awards.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக, வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் இரு நகல்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.