மேலும் செய்திகள்
குப்பையில் உணவு தேடும் கால்நடைகள்
17-Jan-2025
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவு, செப்பாக்கம் கிராமத்தில் குவிக்கப்படுகிறது.அங்கிருந்து டிப்பர் லாரிகளில், சாலை பணிகள் மற்றும் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இவை, டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக குவித்து கொண்டு செல்வதால், மீஞ்சூர், அத்திப்பட்டு, பட்டமந்திரி பகுதிகளில், சாலைகளில் சிதறுகிறது.இதனால், சாலை புழுதிக்காடாக மாறி, மற்ற வாகனங்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது.மேலும், லாரிகளில் இருந்து சிதிறி சாலையோரங்களில் குவியும் சாம்பல் கழிவுகள், காற்றில் பறந்து, அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் படிகிறது.இதனால், வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாவதுடன், பொருட்களும் மீது துாசு படிந்து வீணாகின்றன.லாரிகளில் மலைபோல் குவித்து கொண்டு செல்லப்படும் சாம்பல் கழிவுகளால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கும், சுகாதார பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செப்பாக்கத்தில் இருந்து டிப்பர் லாரிகளில் சாம்பல் கழிவுகளை கொண்டு செல்லும் லாரிகள், வல்லுார், வண்டலுார் - மீஞ்சூர் சாலை சந்திப்பு பகுதிகளில் உள்ள போக்குவரத்து போலீசாரை கடந்து தான் பயணிக்கின்றன.இருந்தும், பணியில் உள்ள போலீசார் அதிக சுமையுடன் செல்லும் சாம்பல் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.கண் துடைப்பிற்கு, சாம்பல் கழிவுகள் மீது, தார் பாய்கள் அரைகுறையாக போடப்படுகின்றன. சாம்பல் துாசியால் மூச்சு திணறல், இருமல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன.போக்குவரத்து போலீசார் கண்காணித்து, அதிக சுமையும் செல்லும் சாம்பல் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
17-Jan-2025