உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரைகுறையான மழைநீர் கால்வாய் பணி

அரைகுறையான மழைநீர் கால்வாய் பணி

கடம்பத்துார்: கடம்பத்துார் பகுதியில், 2.8 கி.மீ, துாரத்திற்கு 1,300 மீட்டர் நீளத்தில் 4.20 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மழைநீர் கால்வாய் பணிக்காக நெடுஞ்சாலையோர ஆக்கரமிப்புகள் அகற்ற சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமையவுள்ள பகுதியில் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் பல இடங்களில் மழைநீர் கால்வாய் பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. இது பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றியமைத்து மழைநீர் கால்வாய் பணியை முழுமைப்படுத்த வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 03:50

இந்த அவல நிலையை சீர் செய்ய இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகள் இன்னும் ஒரு மாமாங்க காலம் எடுத்துக்கொண்டாலும் அதில் ஒன்றும் வியபில்லை


DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 01:55

கடம்பத்தூரில் சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அவரது மேல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க வேண்டும்


DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 01:20

சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரியின் தலைமைஅதிகாரி இதனை விசாரித்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பபட வேண்டும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி