உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்ட நெரிசலில் திணறும் பயணியர் விரைவு ரயிலை கூடுதலாக்க கோரிக்கை

கூட்ட நெரிசலில் திணறும் பயணியர் விரைவு ரயிலை கூடுதலாக்க கோரிக்கை

சென்னை:புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக, விரைவு ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில், காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில், 10க்கும் மேற்பட்ட மின்சார பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் விரைவு பாதை வழியாக இயக்கப்படுவதால், முக்கியமான சில ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இது, அலுவலகம் செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலில் சிக்கி, பயணியர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கூடுதல் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் போன்ற புறநகர் பகுதிகளில் இருந்து, சென்னைக்கு இயக்கப்படும், விரைவு ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், போதிய அளவில் ரயில்கள் இல்லை. சென்னைக்கு உட்பகுதிaயில் மெட்ரோ ரயில் வசதி இருக்கிறது. புறநகரில் மின்சார ரயில்களை நம்பியே, அதிக பயணியர் உள்ளனர். எனவே, புறநகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும், விரைவு மின்சார ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ