உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வெங்கடேஸ்வரர் கோவிலில் பவித்ர உத்சவம்

 வெங்கடேஸ்வரர் கோவிலில் பவித்ர உத்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், மூன்றாம் நாள் பவித்ர உத்சவம் நடந்தது. திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், பவித்ர உத் சவம், கடந்த 14ம் தேதி துவங்கியது. தினமும் நடைபெறும் பூஜைகளில், ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக இந்த உத்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு, மூன்றாம் நாளான நேற்று சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம் சாத்துமறை நடந்தது. மேலும், கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை அமைத்து, பூஜை நடந்தது. இன்று காலை உத்சவம் திருமஞ்சனம், திருவாராதனம் ஹோமம், மஹா பூர்ணாஹூதி மற்றும் கும்பம் புறப்பாடு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி