உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முருகன் கோவில் குளத்திற்கு 4 பக்கமும் சுவர் கட்டணும் கும்மிடி மக்கள் வலியுறுத்தல்

முருகன் கோவில் குளத்திற்கு 4 பக்கமும் சுவர் கட்டணும் கும்மிடி மக்கள் வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் குளத்தின் நான்கு பக்க சுற்றுச்சுவர்களும் பலவீனமாக இருக்கும் நிலையில், ஒரு பக்க சுவரை மட்டும் கட்டுவது வீண் என, பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் முன்பகுதியில் குளம் அமைந்துள்ளது. இக்குளம், 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. குளத்தின் தென்பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடர் மழையின் போது இடிந்து விழுந்தது. மற்ற மூன்று பக்க சுற்றுச்சுவர்களும் பலவீனமாக இருப்பதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இந்நிலையில், இடிந்து விழுந்த பகுதியில், புதிதாக சுற்றுச்சுவர் கட்ட கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் பணிகள் துவங்க இருப்பதால், பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதாவது, ஒரு பக்க சுற்றுச்சுவர் மட்டும் கட்டுவது வீண் என்றும், நான்கு பக்கமும் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை