உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையம் முதல் மற்றும் இரண்டாவது நிலைகள் இயங்கி வருகின்றன. மூன்றாவது நிலையான, 'வடசென்னை -3'க்கான கட்டுமான பணிகள் முடிந்து, நேற்று முன்தினம், தமிழக முதல்வர் ஸ்டாலின் உற்பத்தியை துவக்கி வைத்தார். இந்த விழாவிற்கு வருகை தந்த முதல்வரிடம், தமிழ்நாடு மின்சார மின்உற்பத்தி மற்றும் மின்வினியோகம் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அதில் உள்ளதாவது:வடசென்னை அனல்மின்நிலையம் இரண்டாவது நிலையில், 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், இந்த நிலையத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கிய காலத்தில் இருந்து பணிபுரிந்து வருகிறோம். இந்த தொழிற்சாலை அமைந்ததால், விவசாயம் செய்ய முடியவில்லை. எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. வடசென்னை அனல்மின்நிலைய பணியை நம்பித்தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. இங்கு மாத ஊதியமாக, 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த குறைந்த ஊதியத்தை கொண்டு குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளது.எங்களது வாழ்வாதாரத்தின் நிலையை கருத்தில் கொண்டு, தாங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதி, 153ன்படி, ஒப்பந்த தொழிலாளர்களை, கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை