மேலும் செய்திகள்
விபத்தை தடுக்க வேகத்தடை மீது வர்ணம் பூசப்படுமா?
08-Sep-2024
பொன்னேரி:பொன்னேரி - தத்தமஞ்சி சாலையில், ஆலாடு, சிவபுரம், மனோபுரம், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இச்சாலையில், 25க்கும் அதிகமான வேகத்தடைகள் இருக்கும் நிலையில், அதற்கு வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது.வேகத்தடைகள் இருப்பது குறித்து முன்கூட்டியே வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக எச்சரிக்கை பலகை, ஒளிரும் ரிப்ளக்டர்கள் இல்லை. மேலும், வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பதை அறியாமல், வேகமாக ஏறி இறங்கி நிலை தடுமாறி கீழே விழுந்து சிறு சிறு விபத்தில் சிக்கி வருகின்றனர்.இதனால், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.ஒரு சில வாகன ஓட்டிகள், வேகத்தடையை தவிர்க்க வலது மற்றும் இடதுபுறம் உள்ள பகுதிகள் வழியாக பயணிக்கும்போது, எதிரில் மற்றும் பின்னால் வரும் வாகனங்கள் நிலை தடுமாறுகின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, வேகத்தடைகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
08-Sep-2024