உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பல்லாங்குழியான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் அவதி

பல்லாங்குழியான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் அவதி

திருப்பாச்சூர்:திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர் வழியாக, கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அடுத்து, திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, திருப்பாச்சூர் -- கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலையில், திருத்தணி செல்லும் சாலை சந்திப்பிலிருந்து, திருப்பாச்சூர் செல்லும் சாலை வரை, 100 அடி துாரம் மிகவும் சேதமாகி பல்லாங்குழியாக மாறியுள்ளது.இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.அருகிலேயே, கலெக்டர் அலுவலகம் இருந்தும், சேதமடைந்த இந்த நெடுஞ்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சேதமடைந்துள்ள நெடுஞ்சாலை பகுதியில் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ