உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பங்கள் மாற்றும் பணி திருத்தணியில் 7ல் மின் நிறுத்தம்

மின்கம்பங்கள் மாற்றும் பணி திருத்தணியில் 7ல் மின் நிறுத்தம்

திருத்தணி : திருத்தணி நகரத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொண்டுள்ளனர். சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளன. இதை அகற்றுவதற்கு திருத்தணி மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வரும் 7ம் தேதி திருத்தணி துணை மின்நிலையத்தில் ம.பொ.சி. சாலை, கே.சி.செட்டி தெரு, பழைய மருத்துவமனை தெரு, ஆலமரம் தெரு, கந்தசாமி தெரு, சுவால்பேட்டை முதல் மற்றும் இரண்டாவது தெரு.கந்தப்ப நாயக்கர் தெரு, எம்.ஜி.ஆர். தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படும் என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜன்தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை