உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பைக் விபத்தில் பூசாரி பலி

 பைக் விபத்தில் பூசாரி பலி

பொதட்டூர்பேட்டை: பைக்குகள் மோதிய விபத்தில் கோவில் பூசாரி பலியானார். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார் குப்பத்தை சேர்ந்தவர் ரத்தினவேல், 52. இவர், அத்திமாஞ்சேரிபேட்டையில் உள்ள விநாயகர் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் கோவிலில் பூஜை முடித்து, பேட்டரி இருசக்கர வாகனத்தில் அம்மையார் குப்பம் சென்றார். நாதன்குளம் அருகே எதிரே, 'ஹோண்டா ஷைன்' இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ரத்தினவேல் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ரத்தினவேல், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார். பொதட்டூர்பேட்டை போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி