உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாடு குறுக்கே வந்ததால் விபத்து தனியார் கம்பெனி ஊழியர் பலி

மாடு குறுக்கே வந்ததால் விபத்து தனியார் கம்பெனி ஊழியர் பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 29. காக்களூரில் உள்ள, தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 29ம் தேதி, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். காக்களூர் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் தையிலை பிரியாணி கடை அருகே வந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்தது.இதில் மாட்டின் மீது மோதி நிலை தடுமாறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து, அவரது மனைவி சந்தியா அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை