உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்வாரியத்தில் காலி பணியிடம் பராமரிப்பு பணிகளில் சிக்கல்

மின்வாரியத்தில் காலி பணியிடம் பராமரிப்பு பணிகளில் சிக்கல்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் துணைமின் நிலையத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெறுகிறது. இங்கு, உதவி பொறியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால், மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மெதுார் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் கூறியதாவது:இங்கு, நீண்டகாலமாக உதவி பொறியாளர் பணியிடம் காலியாகவே உள்ளது. பழவேற்காடு பிரிவு உதவி பொறியாளர் கூடுதல் பொறுப்பாக, மெதுார் துணைமின் நிலையத்தையும் கவனித்து வருகிறார்.இங்கு உதவி பொறியாளர் இல்லாததால், பராமரிப்பு பணிகளுக்கு தேவையான மின் உபகரணங்களை உடனுக்குடன் பெற முடியாத நிலை உள்ளது.மெதுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டுகளை உடனுக்குடன் சரிசெய்ய முடியாமல், மின் பயனீட்டாளர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மின்பாதை ஆய்வாளர் பணிகளில் பெண்கள் உள்ளனர். இவர்கள் களப்பணிக்கு செல்வதில்லை. கம்பியாளர்களும் வயதானவர்களாக உள்ளனர். இதனால், மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.துணைமின் நிலையத்தில் உதவி பொறியாளர், உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை